முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறுகண்டி கிராமம் தொடர்ச்சியாக குடிதண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்குகின்ற ஒரு கிராமமாக காணப்படுகின்றது
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய youth with talent திட்டத்தினூடாக குறித்த கிராமத்தின் வளர்பிறை இளைஞர் கழகத்தினர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட 3 இலட்சம் ரூபா நிதியைக் கொண்டு கட்டடம் அமைக்கப்பட்டது.
இதில் குடிதண்ணீர் திட்டத்தை வழங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் இதற்கான நிதி போதாத நிலை காணப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கம்பெரலிய திட்டத்தினூடாக குறித்த குடிதண்ணீர் திட்டத்தை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தார்.
13 இலட்சம் ரூபாய் செலவில் அமையப் பெற்றிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திர தொகுதியுடன் கூடிய கட்டடம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்ட விருந்தினர்களால் மரநடுகையும் மேற்கொண்டபட்டது.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி சரோஜா குகணேசதாசன், ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு செல்லையா சுஜிதரன், திருமுறுகண்டி கிராம அலுவலர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், திருமுறுகண்டி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சுகாதார உத்தியோகத்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment