அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிகளின் பின்னர் இருவர் நிரந்தர அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்படுவரென்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து இந்த பயிற்சிகள் வழங்கப்படுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்கு அமைய 26 பேர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment