காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஜமைத்துல் உலமாசபையின் பிரதிநிதிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவர்கள் எதிர்வரும் 11ம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அசாத் சாலியும் அதேநாளில் சாட்சியமளிக்க தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment