அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரால் குறித்த அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், 07ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
அத்துடன் பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர் என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 03ஆம் திகதியிலிருந்து, குறித்த அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிருந்து தாங்களாகவே விலகியுள்ளனர் என்றும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து முஸ்லிம் தலைவர்கள் 9 பேர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment