மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை வடிவில் இந்த கோரிக்கையை முன்வைத்துள சஜித், இவரது சேவை தற்போதைய நிலையில் நாட்டு மகளுக்கு அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அமைச்சுப் பதவி வகித்த கபீர் ஹாசிம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து கூட்டாக பதவி விலகினார்.
இதனையடுத்து பதவி விலகிய ரிஷாட் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அமைச்சர்களிடம் மீண்டும் பதவிகளை ஏற்குமாறு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் அமைச்சர் சஜித் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment