பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடைவெளிகளுக்கு, பதில் அமைச்சர்களாக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் அனுப்பப்பட்ட பெயர் பட்டியலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.தே.க.யினால் அனுப்பப்பட்ட பட்டியலைப் புறக்கணித்து விட்டே ஜனாதிபதி தான் விரும்பியவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டாரங்களை ஆதாரம் காட்டி சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
ஐ.தே.கட்சியினால் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்கள் இந்த பதில் அமைச்சர்கள் நியமனத்திற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையினால், ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் நெருக்கடி நிலைமை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment