மகா சங்கத்தினரைத் தரக் குறைவாக கருதும் வகையில் அறிவிப்புச் செய்த அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோருக்கு கம்பஹா பிரதேசத்திலுள்ள எந்தவொரு விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தினால் நேற்றையதினம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கம்பஹா சாம விகாரையில் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாட்டிலுள்ள சகல இனங்களும், ஒற்றுமையுடன் ஏற்றுக் கொள்ள கூடியதும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுமான பொதுவான சட்ட திட்டங்கள் பலவற்றை நாட்டில் செயற்படுத்த தேவையான நடைமுறைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment