வெடிகுண்டு பீதியால் தொடருந்து நிலயங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ரயில் நிலையங்களுக்கே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர். சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் பிளாட்பாரம் எண் ஒன்றில், மர்மமான பொருள் ஒன்று நேற்றுக் காலை கண்டெடுக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் அது வெடிகுண்டை மூடும் ஒரு கேஸ் ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
அதனுள் எந்த வெடிப்பொருளும் இல்லை என்பதால் எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
எனினும் பயணிகள் நடமாட்டம் நிரம்பிய தொடருந்து நிலையத்தில் இது போன்றதொரு பொருள் கொண்டு வரப்பட்டது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.
கண்காணிப்பு கமராக்கள் இயங்காததால் அதை யார் போட்டது என்றும் தெரியவில்லை. இதையடுத்து தொடருந்த நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment