முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார்.
கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை நேற்று இடம்பெற்றபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதன்போது கோட்டாபயவின் சட்டத்தரணி இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளதாவது, “சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற கோட்டபாய இன்னும் நாடு திரும்பவில்லை.
அவருக்கு மேலும் சில மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையினால், வெளிநாட்டு பயண அனுமதியை நீதிமன்றம் நீடிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
குறித்த தகவலை கேட்டறிந்துகொண்ட நீதிமன்றம், எதிர்வரும் ஜுன் 19ஆம் திகதி வரை கோட்டாவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடையை தளர்த்தியதுடன் அன்றைய நாள் வரை வழக்கை ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.
0 comments:
Post a Comment