அனந்தி சசிதரன் - கனேடிய தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கை வந்துள்ள  கனேடிய  உயர் ஸ்தானிகர் டேவிட் மக்னொன்  முன்னாள் வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரனை சந்தித்தார். 


இந்த சந்திப்பு இன்று காலை  கிளிநாச்சி சோலைவனம் விடுதியில் இடம்பெற்றது.  இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக அனந்தி சசிதரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,


இறுதி யுத்தத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவொரு நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. சர்வதேச நியமங்களுக் ஏற்பக்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. ரணில் அரசு இன ரீதியில் வெவ்வேறான பார்வையையே கொண்டுள்ளது.  என்றும் அவர் தெரிவித்தார்.


21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பிணைமுறி மோசடி உள்ளிட்ட விடயங்களை மறந்துள்ளமை தொடர்பிலும்  அவர் சுட்டிக்காட்டினார்.

முறிகள் மோசடி தொடர்பில் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்ய முடியாத நாடாளுமன்றம் கொண்ட நாட்டிலேயே நாம் வாழ்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.

இதேவேளை முறிகள் மோசடியை மூடி மறைத்தவர்கள், அதற்கு துணை போன அனைவரும் கூட்டு களவாணிகள் எனவும் அவர் தெரிவித்தார்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment