யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தை தரம் உயா்த்தக்கோாி பாடசாலை மாணவா்கள் பெற்றோா்கள் இணைந்து கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரை வகுப்புக்கள் இயங்கிவரும் நிலையில், க.பொ.த உயா்தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு மாணவா்களும் பெற்றோரும் தொடா்ச்சியாகக் கேட்டு வந்தனா்.
அவர்களின் கோாிக்கைகள் தொடா்பாக பொறுப்பதிகாரிகள் உாிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில் மாணவா்களும், பெற்றோரும் இணைந்து பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
“திறமைகளை நிரூபித்தும் உாிமைகளை ஏன் மறுக்கிறீா்கள்..?”, “கல்விக்கு கடிவாளம்போட்டு எம் முன்னேற்றத்தை முடக்காதே..”என எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது பெற்றோா் மற்றும் மாணவா்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தின் கடைசி கிராமசேவகா் பிாிவான கட்டைக்காடு மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை.
இந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் உயா்தர வகுப்புக்கள் இல்லை. முறையான பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் எமது பிள்ளைகள் தினசாி 20 கிலோ மீற்றா் பயணம் செய்து உயா்தர பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
சில அதிகாாிகள் தடையாக இருக்கின்றனா். எனவே இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கல்வி இராஜாங்க அ மைச்சா் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.
அதன் பின்னரும் எமது கோாிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாம் ஆளுநா் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவோம் -என்றனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவா்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடாத்திய முன்னாள் மாகாணசபை உறுப்பினா் ச.சுகிா்தன் மகஜரை பெற்றுக் கொண்டாா்.
0 comments:
Post a Comment