முஸ்லிம் தலைவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமை சிங்கள தலைவர்களிடம் இல்லை! ஞானசார தேரர்

முஸ்லிம் தலைவர்களிடம் காணப்படும் ஒற்றுமை எமது சிங்களவர்களிடம் காணப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்களைப் பார்த்து சிங்கள தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“இஸ்லாமிய அடிப்படைவாதம் விடுதலை புலிகள் அமைப்பினை காட்டிலும் அப்பாற்பட்டது. மதத்தை அடிப்படைவாதமாக கொண்ட போராட்டத்திற்கு மத ரீதியிலே தீர்வை காண முடியும்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் வல்லமை பௌத்த பிக்குமார்களிடம் காணப்படுகின்றது. இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்காமல் விலகிக்கொள்ள வேண்டும்.
விடுதலை புலிகள் அமைப்பினை விடகொடிய போக்கினையே இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் ஒரு கோரிக்கையினை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
அரசியல் கொள்கையினை கொண்டமையினால் விடுதலை புலிகளின் கோரிக்கை அரசியல் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்வினை காண வழிமுறைகள் வகுக்கப்பட்டன. எனினும், இஸ்லாமிய அடிப்படைவாதம் விடுதலை புலிகள் அமைப்பினை காட்டிலும் அப்பாற்பட்டது.
எவ்வாறாயினும், தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் நெருக்கடிகளை தீவிரப்படுத்தாமல் விலகிக்கொள்வது பொருத்தமாக அமையும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment