தமிழன வரலாற்றில் 60 ஆண்டுகளாக இனப் பிரச்சனை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம். தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று நடைபெற்ற சமுர்த்தி நிவாரண உரித்து பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்களின் எதிரகாலம் தொடர்பாக நிதானமாக சிந்திக்க வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம்.
ஏனெனில் தற்போதைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் ஆதரவைத் தெரிவித்து அரசைக் கொண்டு வந்த போதும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாகவே ஐனாதிபதி செயற்படுகின்றா. இந்த ஏமாற்றம் எமக்கு கவலையளிக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் சிந்தித்து நிதானமாகவே முடுவெடுப்போம் என்றார்.
நாட்டில் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதும் அவர்கள் மீள முழுமையாக கட்டியெழுப்பபடவில்லை. தமிழர்கள் விடயத்திலும் இனப் பிரச்சனை விடயத்திலும் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி ரணில் தலைமையலான நல்லாட்சி அரசைக் கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார்.
நல்லாட்சி அரசில் நீண்டகால பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது. பின்னர் நாடாளுமன்றம் அரசமைப்பு சபையாகக் கூடவிருந்தது அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒத்துக்கீடு செய்யப்படவிருந்தது.
ஆனால் அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமாராகக் கொண்டு வந்தார். இதனால் வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.
தமிழின வரலாற்றில் நாம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம். அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் கூட அதிகமாக தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலும் தமிழர்களே அதிகமாக கொன்றொழிக்கப்பட்டனர்.
நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேச கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சனையான இனப்பிரச்சனை தீர்வில் அக்கறை செலுத்தவில்லை.
இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம் - என்றார்.
0 comments:
Post a Comment