கற்பிட்டி, கரப பகுதியில் 13 கிராம் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து கற்பிட்டி, கரப பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம், பாலாவிய பகுதியில் வசிக்கின்ற 34 வயதானவர் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஹெரோயின் பொதி விற்பனைக்கு தயாராக்கும் போது கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் ஹெரோயின், புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, கடந்த 02 ஆம் திகதி வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மேற்கொண்டசோதனை நடவடிக்கையின் போது 35 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment