பல்கலைக் கழக வெற்றிடத்திற்கு அதிக முஸ்லீம்களின் விண்ணப்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கானப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்ப படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்ப படிவங்கள் கானப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நீண்டகாலமாக கானப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் பல்கலைக் கழகத்தில் கானப்படும் வெற்றிடங்களிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கக்படும் விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி அவர்களில் தகுதியானவர்களை நியமிக்க முடியும் என்பது விதிமுறையாகவுள்ளது.
இதற்கமைய நாடாளுமற்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக சமர்ப்பித்த விண்ணப்பங்களில் இருந்து முதல் கட்டமாக 454 பேரை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தும் வகையில் உயர் கல்வி அமைச்சில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் முகாமைத்துவ உதவியாளர் பணிநிலை தவிரந்த ஏனைய பணிநிலைக்காக கிடைக்கப்பெற்றுள்ள பெயர் விபரங்களில் 137 பேர் முஸ்லீம் விண்ணப்பதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபார்சு செய்த பெயர்ப் பட்டியலில் கானப்பட்டுள்ளது எனவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடப்படுகின்றது. .
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment