முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் சபாநாயகர் கரு ஜயசூர்யாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த செய்தி குறித்து தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி நேற்று தெரிவுக் குழுவில் நினைவுபடுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நேற்று சாட்சியமளித்தார்.
இவரிடம் நேற்று இடம்பெற்ற சாட்சியம் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் பிரதி சபாநாயகர் பொலிஸ் மா அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பில், பிரதி சபாநாயகர் தெரிவுக் குழு முன்னிலையில் நினைவுபடுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் எந்தவிதமான தீவிரவாத செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கடந்த 21 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
தீவிரவாதக் குழுக்கள் நடாத்திய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் குழு நடத்திய விசாரணைகளின் பின்னர் பதில் பொலிஸ் மா அதிபரினால் இந்த அறிவிப்பு முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment