அமைச்சர் ஸ்மிருதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், பிரதான சந்தேகநபராகக் கூறப்படும் நபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தேர்தலின்போது பராலியா எனும் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரும், பாஜக நிர்வாகியுமான சுரேந்திர சிங் என்பவர், ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி சுரேந்திர சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலைக் குற்றவாளிகளை தேடிவந்த பொலிஸார் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் வாசிம் என்பவரை அங்குள்ள ஜாமோ பொலிஸ் நிலையம் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
குண்டடிபட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும். 5 குற்றவாளிகளில் நால்வரை சிறைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment