புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல – மத்திய அரசு

புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே உட்துறை அமைச்சகம்  இவ்வாறு பதிலளித்துள்ளது.
இது குறித்து மத்திய உட்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “அனைத்து பாதுகாப்பு முகாமைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயற்படுகின்றன. உளவுத்துறையின் உள்ளீடுகள் பல்வேறு நிறுவனங்களிடையே நிகழ்நேர அடிப்படையில் பகிரப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய நிதியுதவியால் பயங்கரவாதம் ஆதரிக்கப்படுகிறது.
இருப்பினும், பயங்கரவாதத்தின் மீதான சகிப்புத்தன்மையற்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனால் உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும் பாதுகாப்புப் படை வீரர்களை வான்வழியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment