வவுனியா மரக்காரம்பளை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவர் வாகனத்துடன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற சொகுசு வானம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் அனுராதபுரம் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி தப்பிச் சென்றிருந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாகனச் சாரதியை வாகனத்துடன் நேற்று கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment