நிர்மாணத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடம் மற்றும் மாநாட்டு மண்டபம் இன்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.
20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டடத்தை கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர திறந்து வைத்தார்.
வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி மாவட்ட செயலர் நா.கமலதாஸன், வடபிராந்திய பிரதான பொறியிலாளர் தினேஸ்குமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், கமக்கார அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment