அவசரக்கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு அமுல்படுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து நாட்டில் அவசரக்கால சட்டம் அமுல் படுத்தப்பட்டது.
குறித்த சட்டம் இரண்டாவது முறையாகவும் மீண்டும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாகப் பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தபோதும், சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமைவாக இந்த முறை மாத்திரம் அவசரக்கால சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment