மருத்துவத்தின் பேரில் மான் கொம்புகள் அறுக்கப்படுவதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தக் கொடூரச் சம்பவம் கஜகஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது.
அரியவகையைச் சேர்ந்த சிவப்பு மான்கள் கஜகஸ்தானுக்கும் சீன எல்லைக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் வாழ்கின்றன.
இப் பகுதியை ஆக்ரமிப்புச் செய்துள்ள சிலர் சிவப்பு மான்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்துப் பண்ணைகளில் வளர்த்து வருகின்றனர்.
இந்த மான்களின் கொம்புகளில் மருத்துவ குணம் நிரம்பியிருப்பதாக எழுந்துள்ள வதந்தியைத் தொடர்ந்து பண்ணைகளில் வளர்க்கப்படும் மான்களின் கொம்புகள் ஈவு இரக்கமின்றி அறுத்தெடுக்கப்படுகின்றன.
இதனால் கஜகஸ்தான் அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
0 comments:
Post a Comment