ரிவோல்வர் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இரு தரப்பினரிடையில் முறுகல்நிலை இடம்பெற்ற பகுதியொன்றுக்கு சென்ற போது அதனுடன் சம்பந்தப்பட்ட இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த மோட்டார் வாகனத்திலிருந்து ரிவோல்வர் ஒன்றும் 6 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32, 37 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment