பணிப் புறக்கணிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 40 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சு தமது வேதன பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தோல்வி கண்டதால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலர் மனுர பிரீஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாள்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
0 comments:
Post a Comment