சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அடுத்தாண்டு முதல் சுற்றுலாப்பயணிகள் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
சுற்றுப்பயணிகள் அங்கு சென்றுவருவதற்கான கட்டணம் பல மில்லியன் டொலராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை சுற்றுலாப்பயணிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுவர வாய்ப்பு இருந்ததில்லை.
எனினும் அடுத்த ஆண்டுமுதல் அது சாத்தியமாகும் நாசா அறிவித்துள்ளது.
வருடத்திற்கு இரண்டு தடவைகள் இவ்வாறு பயணிக்க முடியும் எனவும், ஒவ்வொரு முறையும் விண்கலம் 30 நாள்கள் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment