சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த நபரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக விசேட பொலிஸ் குழுவொன்றும் தற்பொழுது சவுதிக்குச் சென்றுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மொஹமட் மில்ஹான் எனப்படும் இந்நபர் பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை திட்டமிட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற வேளையில் இவர் மக்கா சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைதாக தெரிவிக்கப்படும் மேலும் ஐந்து பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனக் கருதப்படும் அஸாருதீன் என்பவனும் இதில் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இந்தக் குழுவினர் கேரலா மற்றும் தமிழ் நாட்டு ஆகிய பகுதிகளில் இளைஞர்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக இணையத்தளத்தின் மூலம் ஊக்குவிப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment