முல்லைத்தீவு மாவட்டத்தில்முன்னெடுக்கப்பட்ட ”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையோடு ஆரம்பமாகி இடம்பெற்றது.
நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களான தயா கமகே, கஜந்த கருணாதிலக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், சிவப்பிரகாசம் சிவமோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment