பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (27 வயது). இவர் தற்போது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் கடந்த மாதம் 15ம் தேதி பாரிஸ் நகர ஓட்டல் ஒன்றில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பிரேசில் நாட்டை சேர்ந்த நஜிலா டிரைண்டேட் என்ற பெண் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து அவர், ‘நெய்மரால் ஈர்க்கப்பட்ட நான் இன்ஸ்டாகிராம் வலைத்தளம் மூலமாக அவரை பின் தொடர்ந்தேன். என்னை பாரிஸ் நகர ஓட்டலுக்கு வரவழைத்த அவர் உடலுறவில் ஈடுபட வற்புறுத்தினார்.
ஆணுறை அணியுமாறு நான் கேட்டுக்கொண்டதை ஏற்காததுடன் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், வலது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் நெய்மர், நேற்று ஊன்றுகோல் உதவியுடன் காவல் நிலையத்துக்கு வந்து வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அதில் ‘இது ஒரு ஆண்-பெண்ணுக்கு இடையே நான்கு சுவர்களுக்குள் நடந்த விஷயம். அதன் பிறகும் எல்லாம் சுமுகமாகவே சென்றது.
நினைவுப் பரிசாக எனது குழந்தையை சுமப்பேன் என்றவர் திடீரென இப்படி அபாண்டமாக பழி சுமத்துகிறார்.
இது என்னை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை. இந்த இக்கட்டான சமயத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
நஜிலாவுடனான தகவல் பரிமாற்றங்களுடன், அந்தரங்கமான சில படங்களையும் நெய்மர் வெளியிட்டுள்ளது அவருக்கு மேலும் சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment