அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார்.
இதேபோல உ.பி. துணை முதல்- மந்திரி கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்த நாள் விழாவும் அயோத்தியில் இன்று கொண்டாட விசுவ இந் பரி‌ஷத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
அயோத்தியில் பஸ்கள், ரெயில்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.
நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் ஊடுவி அயோத்தியில் உள்ள அம்பேத்கர் நகர், பைசாபாத், கோரப்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
இந்த பகுதில் இருந்து தீவிரவாத அமைப்புகளுக்கு வாலிபர்களை ஈடுபடுத்தும் பணியும் நடப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
உளவுதுறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment