இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று நடந்துள்ளது.
இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் விடுமுறையில் வீடு சென்று திரும்பி இராணுவத்தில் இணைந்து கொள்ளவில்லை.
இதையடுத்து குறித்த நபர் இன்று வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வுப்பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக பலர் ஒன்றுகூடிய நிலையில் அங்கு சென்ற பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment