ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசமிருந்த முக்கிய இடம் ஒன்றினை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
கஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தையே இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான்கள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுப்படைகளுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தை மீட்பதற்காக அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இந்நிலையில், காபுல் நகரின் தெற்கே சுமார் 125 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காஜா ஓமரி மாவட்டத்தில் தலிபான்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டம் முழுவதும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment