சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்திருந்தனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன மத ரீதியிலும் எண்ணிக்கையிலும் குறைந்த சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்கின்றோம்.
முஸ்லிம் தலைமைகள் மீண்டும் பதிவிக்கு வருவதால் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது.
இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய நாம் அரசியல் அமைப்பு ரீதியாக எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என மெலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment