வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கணவன் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதுடன் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment