இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இணங்கியுள்ள அரசாங்கம், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மட்டும் ஏன், அனுமதியளிக்க மறுக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுவும் ஒருவகையில் உரிமை மீறல்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக இதுவரையில் சர்வதேச நீதியாளர்களைக் கொண்ட கலப்பு விசாரணைகளுக்குகூட, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment