தமிழ் திரையுலகில் ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற முயற்சியில் தற்பொழுது முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
சிங்கப்பூர், மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இந்த ஆல்பம் புதுமையான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். மும்பையில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிருஷ்டி மற்றும் ரோகித் சுஷாந்தி இதில் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரபல டிஜே பஞ்சோ குவாபோவும் நடித்திருக்கிறார்.
பஞ்சாபி பாடகர் நவீந்தர் சிங் பாடல் பாடியதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். நடன இயக்குனர் சஞ்சய்குமார் இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார்.
வெகு சிறப்பாக இந்த ஆல்பம் வெளியீட்டை நடத்த திட்டமிட்டிருக்கும் சஞ்சனா சிங், விரைவில் திரைப்படங்கள் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
0 comments:
Post a Comment