வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ரெனிஸ் போட்டியில் யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரி அணி சம்பியன் வென்றது.
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இந்த இறுதியாட்டத்தில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வைத்தீஸ்வரா கல்லூரி அணி மோதியது.
இதில் வைத்தீஸ்வராக் கல்லூரி 7:5, 6:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
0 comments:
Post a Comment