ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள ஆல்வார் பகுதியில் கணவன் கண் முன்பு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. போலீஸ் துறையில் வேலை கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கும்பலால் கற்பழிப்புக்கு ஆளான சிறுமி ராஜஸ்தான் மாநில அரசிடம் அரசு வேலை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவர், கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு பல இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காப்பகத்தில் தங்கி இருந்த அந்த சிறுமி தற்போது 18 வயதை அடைந்துள்ளார்.
இந்த நிலையில் தனது குடும்பம் வறுமையில் வாடுவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆல்வார் பகுதியில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கியது போல தனக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் முறையிட்டு இருக்கிறார்.
0 comments:
Post a Comment