வியாபாரிகளின் போராட்டத்தையடுத்து, யாழ்.சாவகச்சேரி பொதுச் சந்தையைக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் குத்தகைக்கு விடுவதெனவும், குத்தகையின் ஆரம்பக் கேள்வித் தொகையாக 50 லட்சம் ரூபா எனவும் நிர்ணியிக்கப்பட்டு கேள்வி அறிவித்தலும் கோரப்பட்டது.
இந்த நிலையில் சந்தை வியாபாரிகள் சந்தையைக் குத்தகைக்கு விடவேண்டாமெனக் கடந்த வாரம் கவனவீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதற்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் சந்தையைக் குத்தகைக்கு விடுவது தொடர்பிலான விசேட அமர்வு தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சந்தையைக் குத்தகைக்கு விடுவது தொடர்பான பொதுவான முடிவு எடுக்கப்படாததால் வாக்கெடுப்பு நடாத்த முடிவு செய்யப்பட்டது.
பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பத்து உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து சந்தையை குத்தகைக்கு விடுவதில்லையென முடிவு செய்தனர்.
0 comments:
Post a Comment