மணல், கல் மற்றும் மண் வியாபாரம் இலங்கையில் மிக மோசமான ஊழல் துறைகளாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் இடம்பெறும் முறைக்கேடுகளை தடுப்பதற்காக பல சட்டதிட்டங்களை தான் கடந்த 04 ஆண்டுகளாக பரிந்துரைத்தாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற “பசுமை மணல் தரிப்பிடம்” எனும் எண்ணக்கருவை அறிமுகம் செய்யும் நிகழ்வின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி; மரங்களை வெட்டுதல், சட்டவிரோத கல், மணல், மண் அகழ்வு காரணமாக ஏற்படும் பாரிய சுற்றாடல் அழிவை தடுப்பதற்கு பல சட்டதிட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தபோதும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அந்த தீர்மானங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது எனக்குறிப்பிட்டார்.
அதேவேளை, அபிவிருத்தி பணிகளுக்காக கல், மணல், மண் போன்றவை தேவையாக இருந்தாலும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் சரியான முகாமைத்துவத்தின் கீழ் அவற்றை பெற்றுக்கொள்வதின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, புதிய தொழிநுட்ப வழிமுறைகளுடன் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதின் முக்கியத்துவத்தையும் தெளிவூட்டினார்.
0 comments:
Post a Comment