குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகத் தயார் – ரிஷாத்

தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும், அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பகிரங்க சவால் விடுத்தார்.
இன்று(21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய் அவர் மேலும் கூறியதாவது;
“கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ஸ இனங்களுக்கு இடையே குரோத உணர்வுகளையும் வைராக்கிய சிந்தனைகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றார். என்னைப்பற்றி பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றார். ”
”தெமட்டகொட குண்டுவெடிப்பு சம்பவத்தின் தற்கொலைதாரியான பெண் ஒருவர் எனது தாயின் சகோதரரின் மகள் என திரும்ப திரும்ப அவர் கூறி எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றார். எனது தாய்க்கு சகோதர்கள் எவரும் இல்லையெனவும் விமல் வீரவன்ஸ கூறுவது சுத்தமான பொய் எனவும் நான் பொறுப்புடன் இந்த சபையில் கூறுகின்றேன். ”
இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைத்து நல்லுறவை இல்லாமலாக்கும் விமல் வீரவன்ஸவின் கீழ்த் தரமான செயலை வண்மையாக கண்டிக்கின்றேன். வாக்குகளை அதிகரிப்பதற்காகவே விமல் இந்த பொய்களை பரப்புகின்றார். தற்போதைய சூழ்நிலையில் இனங்களுககிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதே பொறுப்புள்ள அரசியல்வாதியின் பன்பாகும் ஆகும்.
”நான் மூன்று பிள்ளைகளின் தந்தை, எனக்கென்று குடும்பம் உள்ளது, கட்சி ஒன்று உள்ளது. எனது கட்சியில் பெரும்பாலான ஆதரவாளர்கள் உள்ளனர். இவ்வாறான பொய்யான பிரசாரங்கள் மூலம் என்மீதும் எனது சமூகத்தின் மீதும் விமல் களங்கம் விளைவிக்கிறார். நிம்மதியா வாழ வைப்பதும் அவர்களுக்கான பணிகளை முன்னெடுத்து இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதே எனது வேலைத்திட்டங்களாக இருக்கின்றன.”
முஸ்லிம்கள்எந்தக் காலத்திலும் ஆதரவளித்தவர்கள் அல்ல. இந்த சிறிய நாட்டில் இன உறவு தளைத்தோங்குவதற்கு முஸ்லிம்களாகிய நாம் பாடுபட்டு வருகின்றோம். உண்மை என்றொரு நாள் வெல்லும் என்பதை அனைத்து மதங்களினதும் போதனையாகும். என்றும் ரிஷாத் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment