வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்கான ஒன்று கூடல் இன்றையதினம் இடம்பெற்றது.
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சாவல்கள் , வடக்கு கிழக்கில் உள்ள வளங்கள் , வியாபார விருத்தியை எவ்வாறு மேற்கொள்ளுவது , பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு சீர் செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கு சம்மேளனத் தலைவர் ரீ.குலதீபன், வவுனியா மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே.அமிர்தலிங்கம், வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர்கள் , உபதலைவர்கள் , செயலாளர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment