பீகார் மாநிலத்தின் சில மாவட்டங்களில் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, முசாபர்நார் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மூளை காய்ச்சல் நோய்க்கு சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவது தொடர்பாக முன்கூட்டியே மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கட்டுப்படுத்த தவறியதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பண்டே ஆகியோர் மீது முசாபர்நார் மாவட்ட நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி என்பவர் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
சட்டப்பிரிவு 308, 323 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் தொடர்ந்துள்ள இந்த வழக்கை அனுமதித்த தலைமை மாஜிஸ்திரேட் விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
0 comments:
Post a Comment