இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாநிலத்தில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றிய நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது.
இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment