ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக அமெரிக்காவும், அமெரிக்கா நடத்தியதாக ஈரானும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், ஓமன் வளைகுடா பகுதியில் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்களும் உடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு எண்ணெய் கப்பலுக்கு 3 முதல் 4 கடற்படை வீரர்கள் வீதம் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment