உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தெரிவுக்குழு தொடர்ந்தால், அமைச்சரவையை நடத்த மாட்டேன் என ஜனாதிபதி அழுங்குப்பிடி பிடித்துள்ளதால், அரச நிர்வாகம் சீர்குலைந்து, மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டுமென ஐ.தே.கவின் பலம் பொருந்திய இரண்டாம் நிலை தலைவர்கள் பலர் கருத ஆரம்பித்துள்ளனர்.
கட்சியின் சக்தி வாய்ந்த மூன்று அமைச்சர்கள், தெரிவுக்குழுவை செயலிழக்க செய்யும் அரசியல் காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இந்த மூன்று அமைச்சர்களில் இருவர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களும், மேலும் சில அமைச்சர்களும் கட்சிக்குள் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளால் ஜனாதிபதியுடன் முரண்பட்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது, அரச நிர்வாக குழப்பம் மஹிந்த ராஜபக்ச தரப்பையே பலப்படுத்துகிறது என அவர்கள் கட்சிக்குள் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சியின் இரண்டு பிரதான அமைச்சர்கள் தெரிவுக்குழு நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென கட்சித் தலைவரிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
0 comments:
Post a Comment