முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பு தொடர்பில் விசேட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆட்சபனை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிபதிகளான அசல வென்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
குறித்த மனுக்கள் தொடர்பில் சட்ட நிலைமைகள் இல்லை என தெரிவித்து இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment