யாழ்ப்பாணத்தில் தற்போது பொலிசாரினால் பெறப்படும் தகவலிற்கான விண்ணப்ப படிவத்தில் தகவல் வழங்க முடியாது என ஓர் அரச உயர் அதிகாரி எழுதி வழங்கியுள்ளார்.
நாட்டில் ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்னர் பொலிசார் ஓர் படிவம் மூலம் சகல வீடுகளிலும் நிரந்நரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிக்கும் விபரங்களை படிவம் மூலம் எழுத்தில் திரட்டுகின்றனர்.
இதற்காக கிராம சேவகர்களின் ஊடாக விண்ணப்ப படிவத்தை வழங்கி பூரணப்படுத்தி பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு பொலிசார் கோரும் விபரம் சட்டவிரோதமானது எனவும் அதனால் குறித்த விபரத்தினை வழங்க முடியாது என்பதனால் மேற்படி படிவத்தில் " விபரம் வழங்க முடியாது" என எழுதிய படிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கிராம சேவகர் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment