தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – சுமந்திரன்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலை. அது நிறைவேற்று அதிகாரத்தின் வேலையல்ல. எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும்” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சர்களையும் உடன் அமைச்சரவை கூட்டத்திற்கு வருமாறு நேற்று அழைப்பு விடுத்த ஜனாதிபதி, குறித்த தெரிவுக்குழுவில் உள்ள ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அண்மைய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் தெரிவுக்குழுவிற்கு புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினால் இனிமேல் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment