ஜி.எஸ்.டி. விதிகளை எளிதில் புரிந்துகொள்ள காமிக் புத்தகம்

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம்ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறியது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் ஆனாலும் ஜி.எஸ்.டி. வரி குறித்து மக்களிடையே உள்ள குழப்பம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. விதிகளில் உள்ள குழப்பத்தை தீர்க்கும் வகையில் "அட்வெஞ்சர்ஸ் ஆப் தி ஜி.எஸ்.டி. மேன்" என்ற காமிக் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஸ்ரீநிவாஸ் கோட்னி என்பவர் எழுதியுள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகள் மற்றும் விதிகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், கேலிச்சித்திரங்கள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் இந்த புத்தகத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறித்த பல கருத்துக்கள் சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளதாக
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment