2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்துள்ளார்.
அந்தவகையில் அவர் இன்றைய தினம் ப்ளோரிடா மாநிலத்தில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, மக்களுக்கு உரையாற்றிய அவர்; எதிர்வரும் நான்கு வருடங்களுக்காக தம்மை மீண்டும் தெரிவு செய்யுமாறு கோரியுள்ளார்.
எதிர்கட்சிகள் நாட்டை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். வீழ்ச்சி போக்கை சந்தித்திருந்த நாடு தமது ஆட்சிகாலத்தில் ஸ்திரதன்மையை அடைந்துள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment